குற்றச்சாட்டுக்களும் அமைச்சர் சுவாமிநாதனின் மறுப்புகளும்?

தமது அமைச்சு தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மீள்குடியேற்ற அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் மறுத்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த குற்றச்சாட்டுக்களை அமைச்சர் மறுத்துள்ளார்.

இதேவேளை மஹாவலி திட்டத்தின்கீழ் முல்லைத்தீவில் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாக வெளியாகியுள்ள தகவல்களை ஜனாதிபதி மறுத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த குடியேற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சமர்ப்பித்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியா அல்லது சீனா என்ற எந்தநாடு கட்டிக்கொடுத்தாலும் வீடற்ற மக்களுக்கு வீடுகள் கிடைத்தால் போதும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#Kilinochei   #Suwaminathan  #tamilnews #srilanka     #jafffna

No comments

Powered by Blogger.