ஜெயந்தியாய குளத்தில் மூழ்கிய இரு மாணவர்கள் பலி!

வாழைச்சேனையிலுள்ள ஜெயந்தியாய குளத்தில் 4 மௌலவி மாணவர்கள் பயணித்த படகு உடைந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். இன்று பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏறாவூரைச் சேர்ந்த மௌலவி மாணவர்களான 24 வயதான ஸாகிர் மற்றும் 23 வயதான சாதிக்கீன் ஆகிய இருவமே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இஸ்ஸத் என்ற மாணவன் கவலைக்கிடமான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இன்று பகல் மௌலவி மாணவர்கள் 7 பேர் ஜெயந்தியாய குளத்திற்குச் சென்றிருந்த நிலையில் அதில் நால்வர் குளத்தில் படகு சவாரி செய்துள்ளனர். இவ்வேளையில் படகு உடைந்ததில் அவர்கள் குளத்தில் மூழ்கியுள்ளனர்.

நீரில் மூழ்கிய எவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஒருவர் மரக்கட்டையொன்றைப் பற்றிக் கொண்டு கூக்குரலிட்டுள்ளார்.இதனையடுத்து அங்கிருந்தவர்கள் குறித்த நால்வரையும் மீட்ட நிலையில் அவர்களில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்

இந்நிலையில் பலியானவர்களின் சடலங்கள் உடற்கூராய்விற்காக வாழைச்சேனை ஆதார வைத்தியாசலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.மேலும் குறித்த சமபவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


#Batticaloa #srilanka  #tamilnews   #deth 

No comments

Powered by Blogger.