வாயால் வடை சுடுபவன் நான் அல்ல -தவராசா!

பதவி மோகத்தினால் நான் மாகாண சபையின் செயற்பாட்டின்மையினை விமர்சிக்கவில்லை. நாற்பத்தைந்து வருடங்களிற்கு மேலாக நான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன்.

தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் நானும் ஒருவன். பொன் சிவகுமாரன், லோறன்ஸ் திலகர், பொன் சத்தியசீலன் போன்றோருடன் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலிருந்தே (1970) செயற்படுபவர்களில் நானும் ஒருவன்.

மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், குட்டிமணி, தங்கத்துரை, புஸ்பராஜா, வரதராஜப் பெருமாள், பாலகுமார் போன்றோருடன் சம காலத்தில் சிறையில் இருந்தவன் (1976/1977).

மேற்கண்டவாறு வடமாகாணசபை எதிர்கட்சி தலை வர் சி.தவராசா கூறியுள்ளார். எதிர்கட்சி தலைவர் ஊடகங்களுக்கு வழங்கும் கேள்வி பதிலிலேயே எ திர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கேள்வி: தங்கள் கட்சி தங்களை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியும் அவைத் தலைவரின் ஆசியினாலேயே தாங்கள் அப் பதவியில் உள்ளதாகவும், எமது (மாகாண சபையின்)

அதிகாரங்களை மற்றவர்கள் மடக்கிப் பிடித்ததால்தான்  நாங்கள் (மாகாண சபை) பல பிரச்சினைகளிற்கு முகங்கொடுத்து வருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளாரே. அதுபற்றித் தங்கள் கருத்து என்ன?

பதில்: நான் இன்றோ நேற்றோ பதவிக்காக அரசியலிற்கு வந்தவனும் அல்ல, 'வாயால் வடை சுடுபவனும்' அல்ல.

'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பார்கள். இருக்கின்ற அதிகாரங்களை வினைத்திறனாகச் செயற்படுத்துவதற்கு ஆளுமையும், விவேகமும் தேவை. அங்குதான் எமது திறமையை வெளிக்காட்டல் வேண்டும்.

வட மாகாண சபை கடந்த 5 வருடங்களில் எங்களிற்கு இருக்கும் அதிகார வரம்பிற்குள் வினைத்திறனாகச் செயற்பட்டு எத்தனையோ விடயங்களைச் செயற்படுத்தி இருக்க முடியும். அந்த இயலாத் தன்மையை நிரூபிக்க என்னிடம் நிறைய ஆதாரங்கள் உண்டு.

ஆதலினாற்தான் முதலமைச்சரினைப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோரியுள்ளேன், தற்போதும் கோரி வருகின்றேன். முதலமைச்சர் தான் கடந்த ஐந்து வருடங்களில் மாகாண சபையினை வினைத்திறனாகச் செயற்படுத்தியுள்ளார் என்பதைப் பகிரங்க விவாதத்தில் நிரூபித்துக் காட்டட்டும்,

நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து அல்ல, அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகின்றேன். மாகாண சபையின் அசமந்தப் போக்கினால் நாம் இழந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களோ ஏராளம். அபிவிருத்தி என்பது ஏதோ கெஞ்சிப் பெறும் விடயமல்ல.

அது எமது உரிமையின் ஓர் அம்சம். ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்திக்கான உரிமை சாசனம் இதனைத் தெட்டத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

Development is a human right: Everyone is “entitled to participate in, contribute to, and enjoy economic, social, cultural and political development, in which all human rights and fundamental freedoms can be fully realized,” the groundbreaking UN Declaration on the Right to Development proclaimed in 1986 that development is a right that belongs to everyone.

பதவி மோகத்தினால் நான் மாகாண சபையின் செயற்பாட்டின்மையினை விமர்சிக்கவில்லை. நாற்பத்தைந்து வருடங்களிற்கு மேலாக நான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் நானும் ஒருவன்.

 பொன் சிவகுமாரன், லோறன்ஸ் திலகர், பொன் சத்தியசீலன் போன்றோருடன் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலிருந்தே (1970) செயற்படுபவர்களில் நானும் ஒருவன். மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், குட்டிமணி, தங்கத்துரை, புஸ்பராஜா, வரதராஜப் பெருமாள், பாலகுமார் போன்றோருடன்

சம காலத்தில் சிறையில் இருந்தவன் (1976/1977). அண்மையிற்தான் அரசியலிற்கு வந்த முதலமைச்சரிற்கு நான் இங்கு குறிப்பிடும் பெயர்களே சில வேளைகளில் தெரியாமலிருக்கலாம்.

எனது அரசியல் செயற்பாட்டினால் எனது சொந்த வாழ்வில் இழந்தவை ஏராளம். நான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதனால் எனது மேற்படிப்பிற்குக் கூட முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சந்திரிகா அம்மையாருடைய ஆகஸ்ட் 2000ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு வரைபு தொடர்பான அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுப் பங்களிப்புச் செய்தவர்களில் நானும் ஒருவன். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி மாநாட்டு (2006/2007) தொடர்

அமர்வுகளில் வடக்கைச் சேர்ந்த தனி மனிதனாக நின்று தமிழர்களின் உரிமையை அங்கீகரிக்கும் வண்ணம் அரசியலமைப்பு வரைபினை ஏற்படுத்தக் கூடிய வகையிலான அறிக்கையினைத் தயாரிப்பதில்  பாரிய பங்களிப்பினை வழங்கியவன்.

தற்போதைய அரசியல் யாப்பு வரைபிற்கான பொது மக்கள் கருத்தறி குழுவின் உறுப்பினராக இருந்து அக்குழுவின் அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களில் பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்யும் வகையில் அவ் அறிக்கையினைத் தயாரிப்பதில் முழுமையாகப் பங்களிப்புச் செய்தவன்.

அத்துடன் அரசியலமைப்புச் சபையின் மத்தி – மாகாணங்களிற்கிடையிலான  உறவு தொடர்பான உபகுழுவின் நிபுணத்துவ உறுப்பினராக இருந்து அதன் அறிக்கை வரைபில் அதே போல் பங்காற்றியுள்ளேன்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளினை முழுமையாக இனங்கண்டு அவற்றை நிவர்தி செய்யும் விதத்தில் அரசியலமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் அமையக் கூடிய வகையிலேயே எனது முன்மொழிவுகள் எப்போதும் அமைந்திருந்தன.

எனது இந்த நிலைப்பாட்டினையே முதலமைச்சரும் கொண்டிருப்பதனால்தான் முதலமைச்சர் சார்பில், அன்றைய அமைச்சர் குருகுலராஜாவையும் இணைத்துச் சென்று, அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் முன்னால் நான் பரிந்துரைகளை வழங்கியிருந்தேன்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன அல்லது அதனை முழுமையாகச் செயற்படுத்துவதில் தடைகள் உள்ளன என்பதற்காக அது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. கூட்டுறவுத்துறை, கல்வி (வடக்கில் இயங்கும் 1098 பாடசாலைகளில் 22 தேசிய பாடசாலைகள் தவிர),

சுகாதாரம் (யாழ் போதனா வைத்தியசாலை தவிர 110 வைத்தியசாலைகள்), விவசாயம்........... இவ்வாறாக 35 விடயங்கள் மாகாணத்திற்கான விடயப் பரப்பாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவ் விடயப் பரப்புகளினை முற்றாக மாகாண சபையினுடைய அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்களாகச் செயற்படுத்துவதற்கு ஏறத்தாழ 300 நியதிச் சட்டங்கள் வரை இயற்ற வேண்டுமென நிபுணர்கள்  தெரிவித்துள்ளனர்.

இது வரை மாகாண சபையினால் பதின்நான்கு நியதிச்சட்டங்களே ஆக்கப்பட்டுள்ளன. நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு மாகாண சபையில் ஆளணிப் பற்றாக்குறை இருப்பதனால் துறைசார் நிபுணர்கள் ஊடாக அவற்றினைத் தயாரிப்பதற்கு வெளிநாட்டுத் தூதரகங்கள் கூட உதவ முன்வந்தன. அவற்றினைக் கூடப் பாவித்து மாகாண சபையினால் நியதிச் சட்டங்களை ஆக்கத் தெரியவில்லை.

இவர்களது மந்தப் போக்கினைக் கண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும், நான் மீன்பிடி தொடர்பான நியதிச்சட்டத்தை இயற்றிக் கடந்த பெப்ரவரி மாதத்தில் கொடுத்திருந்தேன். இதுவரை அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது. மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட விடயப்பரப்புகளிற்கான நியதிச் சட்டங்களை ஆக்குவதன் மூலமே அவ்விடயப் பரப்புகளிற்கான மத்திய

சட்டவாக்கங்களை வட மாகாணத்திற்குள் செயலிழக்கச் செய்ய முடியும். அதுவரை மாகாண விடயங்களில் மத்தியின் தலையீடு சட்ட ரீதியாகத் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இவ்வாறே என்னால் மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாட்டின்மையினை அடுக்கிக் கொண்டே போகலாம். 'ஆடத் தெரியாதவர் மேடை கோணல்' என்று கூறிக் கொண்டே இருப்பர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.