வலுப்பெறும் அமெரிக்க – சீன முரண்பாடு

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள நிலையில், இரு நாடுகளும் இன்று (வியாழக்கிழமை) முதல் புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தவுள்ளன.

அதன்படி, 16 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரு நாடுகளினதும் பொருட்கள் மீது வரிகளை சுமத்த இருதரப்பும் எதிர்பார்த்துள்ளன.

16 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பானது, பீஜிங் நேரப்படி இன்று 12 மணிமுதல் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 25 வீத வரி விதிப்பானது இரசாயன பொருட்கள், விவசாய உபகரணங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அன்டனாக்கள் உள்ளிட்ட சுமார் 280 சீனப் பொருட்களை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நிலக்கரி, மருத்துவ கருவிகள், கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட 16 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது 25 வீத வரி விதிப்பை மேற்கொண்டு சீனா பதிலடி கொடுக்கவுள்ளது.

வொஷிங்டனுக்கும், பீஜிங்கிற்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு வழியை கண்டறியும் வகையில் சீன நிதி அமைச்சும், அமெரிக்க திறைசேரி திணைக்களமும் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையிலேயே இந்த புதிய வரி விதிப்புகள் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.