கடற்படை பயிற்சிக்காக இலங்கை கடற்படை கப்பல் அவுஸ்திரேலியா பயணம்!

அவுஸ்திரேலிய கடற்படையினரால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் KAKADU கடற்படை பயிற்சிக்கு பங்குபற்றும் நோக்கில் இலங்கை கடற்படை கப்பல் ‘சிதுரல’ திருகோணமலை துறைமுகத்தில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்தது.

இந்த கப்பல் கடற்படை சம்பிரதாயங்களின் படி வழி அனுப்பி வைக்கப்பட்டது.

150 பேர் கொண்ட இந்த கப்பலில் 26 அதிகாரிகளும் 124 கடற்படை வீரர்களும் அடங்குகின்றனர்.

இந்தப் பயிற்சிகள் இம்மாதம் 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 16ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் டார்வின் கடற்பகுதியில் இடம்பெறவுள்ளது.

சுமார் 24 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

No comments

Powered by Blogger.