அனுராதபுர மாவட்டத்தில் திடீர் மரணங்கள் அதிகரிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் திடீர் மரணங்கள் கடந்த ஜீன் மாதமளவில் எதிர்பார்க்காத விதமாக அதிகரித்துள்ளதாக வட மத்திய மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் பாலித பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வைத்தியசாலை பதிவுகளின்படி திடீர் விபத்துகளில் 20பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன், திடீர் வீதி விபத்துகளில் 17 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துகளால் இடம்பெற்ற மரணங்கள் ஏனைய மாதங்களை விடவும் ஜீன் மாதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

திடீர் மரணங்களால் ஆகஸ்ட் மாதம் 20 பேர் மரணமடைந்துள்ளனர். வீதி விபத்துகளை விட நீரில் முழ்கி இரண்டு பேரும் கிணற்றில் வீழ்ந்து ஒருவரும் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி ஒருவரும் தீப்பற்றி ஒருவருமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர்.

குறித்த மரணங்கள் அநுராதபுரம், பொலன்னறுவை, பரசன்கஸ்வெவ, மிகிந்தல கலென்பிந்துனுவெவ, கல்நேவ மகவிலச்சிய, திறப்பன, கெப்பிதிகொல்லாவ, ராஜாங்கன, தந்திரிமலை,எப்பாவல ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.