சிவாஜிலிங்கம் என்னை ஒன்றும் செய்யமாட்டார் மைத்திரி!

மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் த னது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இ ருக்கிறது. அதனாலேயே சிவாஜிலிங்கத்துடன் செ ன்று பேசினேன் என ஐனாதிபதி மைத்திரிபால சிறி சேனா கூறியுள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வி ல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐ னாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போ து மேலும் அவர் கூறுகையில்,

அண்மையில் நான் யாழ்ப்பாணம் வந்தபோது சிவா ஜிலிங்கம் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார். நான் உடனேயே எனது வாகனத்தில் இருந்து இறங் கி சென்று எதற்காக போராடுகிறீர்கள்? என சிவா ஜிலிங்கத்திடம் கேட்டேன்.

இதற்கு பின் எனது நண்பர்கள் என்னை தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவ்வாறு செய்யவே ண்டாம் என கூறினார்கள். ஆனால் சிவாஜிலிங்க த்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் தன து மக்களுக்காக போராடுகிறார்.

அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என எனக் கு நம்பிக்கையுள்ளது. இன்றைய நிகழ்வுக்கும் அவர் வந்திருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி என ஐனாதி பதி மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.