விஜயகலாவின் சர்ச்சைக்குறிய கருத்து விவகாரம் நாளை!

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பாக எடுக்கப்படக் கூடிய நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு நாளை சபாநாயகரினால் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அவரின் கருத்து அரசியலமைப்புக்கு முரன்பட்டதா என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிவிக்குமாறு சபாநாயகர் சட்டமா அதிபருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி அந்த அறிக்கை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும். இதனையடுத்து நாளைய தினம் பாராளுமன்றம் கூடும் போது சபாநாயகர் அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.