மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொய்யா


கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிவிட்டு சாப்பிடக் கூடாது. கொய்யாப்பழம் முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும்.

தோல் சுருக்கத்தைக் குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தையும் தரும். நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றலும் இதில் உள்ளது.

இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறுவதோடு ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்தும் வல்லமையும் இதில் உள்ளது

Powered by Blogger.