புற்றுநோய் பாதிப்புகளை குறைக்கும் மஞ்சள் பால்

பால் மற்றும் மஞ்சள் சேரும் போது எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள் கிடைக்கின்றது.
மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் ஏற்படும் நச்சுக்கள் மற்றும் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் போன்றவைகளை அழிக்கும் ஒரு பயனுள்ள தீர்வாக மஞ்சள் பால் அமைந்துள்ளது.

மஞ்சள் பால் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு பாக்டீரியா தொற்று, வைரஸ்களால் உண்டாகும் நோய் போன்றவற்றை தடுக்கிறது. மேலும் சுவாச செயல்பாடுகள், உடல் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்கும் விரைவான நிவாரணம் வழங்குகிறது. இந்தப் பாலை குடிப்பதால் மார்பக, தோல், நுரையீரல், புரோஸ்டேட், மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கின்றது.

புற்றுநோய் செல்களை தடுக்கவும், கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கவும் உதவியாக இருக்கின்றது. இரவு தூங்க செல்வதற்கு முன் மிதமான சூடுள்ள பாலில், அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து பருகுவதால்,உடல் வெப்பநிலை சீராக இருக்குமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.