இலங்கையில் முதற் தடவையாக தந்தையர்கள் கிரிக்கெட் போட்டி!

எனது தந்தையே, எனது நாயகன் (My Dad, My Super star) என்ற தொனிப்பொருளில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான நிகழ்வு முன்னாள் இலங்கை டெஸ்ட் கிரிக்ககெட் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் உத்தியோகப் பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று (05) இரவு கொழும்பில் இடம்பெற்றது.
இந்தக் கிரிக்கெட் சுற்றில் அர்ஜுன ரணதுங்க, சமிந்த வாஸ், பிரமோதயா விக்கிரமசிங்க, உபுல் சந்தன, லங்கா டி சில்வா, அவிஸ்க குணவர்ந்தன ஆகிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
SPORTONIX இஸ்போட்நிக்ஸ் என்ற நிறுவனமே இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த போட்டியில் 18 ஆணிகள் 4 குழுக்கலாக விளையாடவுள்ளன.
இந்த கிரிக்கெட் போட்டியானது தந்தையர்கள் மட்டுமே பங்குபற்றும் போட்டியாகும். இலங்கையில் முதலாவது தடவையாக இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது. போட்டிகள் செப்டம்பர் மாதம் இறுதிப் பகுதியில் என்.சி.சி, ப்லூம் பீல்ட், பீ.ஆர்.சி மற்றும் கொல்ட்ஸ் ஆகிய மைதானங்களில் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் அர்ஜுன ரணதுங்க கருத்து வௌியிடுகையில், ´இது வெறும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி அல்ல. இது 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணியின் மிகப் பெரிய சமூகப் பொறுப்பாகும். இது எமது சமூக சேவையாகும். இதனால் பாடசாலை மட்ட கிரிக்கெட்டை எம்மால் அபிவிருத்தி செய்யமுடியும்´ என்றார்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அரவிந்த புஸ்பகுமார (1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி) கருத்து தெரிவிக்கையில், ´எமது தந்தையர்கள் பல அர்பணிப்புகளை செய்துள்ளனர் எமது கிரிக்கெட்டை மேம்படுத்த. நிறைய கிரிக்கெட் வீரர்கள் பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளிலேயே விளையாடினர். ஆனால் அவர்களுக்கு மீண்டும் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை நிவர்த்தி செய்வதற்கே நாம் இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஆரம்பித்துள்ளோம். இதுவே இலங்கையில் முதன் முதலில் தந்தையர்களுக்காக விளையாடப்படும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியாகும். இந்த கிரிக்கெட் போட்டியானது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தளிக்கும்´ என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.