சுவிட்சர்லாந்து🌹🌹🌹👌👌👌


தெரு நாய்களின் குரைப்புகள்
அருமருந்துக்கும் கேட்காத நாட்டில்
அமைதியான பகலும்
அந்நியப்படாத இரவும்
அன்னையைத்தான் நினைவூட்டிக் கொண்டிருக்கும்..
நடுநிசியிலும் அச்சமின்றி
நடந்து வர என்னால் முடிகிறது..
ஆண் பெண் அயோக்கியத்தனங்கள்
ஆடையிலோ அதட்டலிலோ
ஆட்டம் போட்டதில்லை இங்கே..
இரவுச்சோடிகள் இங்கும் உண்டு எனினும்
விருப்பமின்றிய தொடுகை
நிகழ்வதில்லை..
இரவும் பகலும் அமைதியாய்த்தான் நகர்கிறது..
வீட்டு நாய்கள் கூடக் குரைப்பதில்லை வீணே..

மகிழினி காந்தன்
சுவிட்சர்லாந்து


#swiss   #Switzerland   #kavithai

No comments

Powered by Blogger.