வன்னியில் மாணவியைச் கடத்தி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய காமுகன் !

புதுக்குடியிருப்பில் உயர்தர பரீட்சைக்கு எழுதிவிட்டு திரும்பி வரும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த குற்றச்சாட்டில் கைதானவர் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 19ம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

மாணவியை கடத்தி சென்று தனிமையான இடத்தில் வைத்து சீரழித்த பின், உடையாளர்கட்டில் காமுகர்கள் இறக்கிவிட்டு தப்பி சென்றிருந்தனர்.

மாணவியின் வாக்குமூலத்திற்கு அமைய பளைப்பகுதியில் வைத்து ஒருவர் கைதானார். அவர் கிளிநொச்சி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தையா விஜயரூபன் (26) என புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.