பேச வேண்டுமே நீ...!

தொலைபேசி அழைப்போசை
ஒலித்திடும் பொழுதெல்லாம்
தொலைதூரத்திலே நின்றாலும்
ஓடோடி வருகிறேன்

குறுஞ்செய்தி வரும் ஓசை
கேட்டிடும் பொழுதெல்லாம்
உன் செய்தி தானென்று
ஏமாந்து போகின்றேன்

செய்தியை நான் எழுதி
அனுப்பிடவே நினைத்தாலும்
எழுதி எழுதியே
அனுப்பாமலே அழிக்கிறேன்

உன்  குறுஞ்செய்தி முழுவதுமே
காலாவதி ஆனாலும்
புதிதான உற்பத்தி போல்
இன்றுமே ரசிக்கிறேன்

புது இலக்க அழைப்பினிலே
நீயாக இருக்குமென்று
அழைப்போசை அழுத்தியே
உன் குரலோசை
தேடுகின்றேன்

பேசிடவே பல வார்த்தை என் 
மனதினிலே எழுந்தாலும்
பேசாமலே உனக்காக
ஊமையாகி அழுகின்றேன்

மௌனமாக நீயிருந்து
என் மனதை கொன்றாலும்
உன் ஒன்லைன்  நேரம் பார்த்து
என் மனதை தேற்றுகிறேன்

உன்னிடத்தே சொல்ல வரும்
என் எண்ணங்கள் எத்தனையோ
வெற்றிடமாய் என்றுமே்
என் நெஞ்சில் பதிந்திருக்க

ஆம் அங்கே மீண்டும்
ஒரு அழைப்போசை
ஒலிக்கிறதே.......!
நீயாக இருக்குமோ....?

***ரேகா.சிவலிங்கம்****

No comments

Powered by Blogger.