முல்லைத்தீவில் கிராமியப் பாலங்கள் திறப்பு

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.
துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர்க.வ.கமலேஸ்வரனால் பாலங்கள் மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டன.
புகழேந்திநகர் வீதிப்பாலம், பூவரசங்குளம் துணுக்காய் வீதிப்பாலம், கல்விளான் வீதிப்பாலம், பழையமுறிகண்டி கொக்காவில் இணைப்பு வீதிப்பாலம் 1, பழையமுறிகண்டி கொக்காவில் இணைப்பு வீதிப்பாலம் 2 என 5 பாலங்கள் திறந்து வைக்கப்பட்டன.
நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் , வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் , துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.