யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் மாநாடு

யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் மாநாடுஎதிர்வரும் 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது.
சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.
முதலாவது அமர்வு சிவயோகசுவாமிகள் அரங்காகவும், இரண்டாவது அமர்வு சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அரங்காகவும் இடம்பெறும்.
நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தமிழ்நாடு பேரூர் ஆதீன முதல்வர் வண. மருதாசலம் அடிகளார், இராமகிருஷ்ணமிஷன் இலங்கைக் கிளையின் முதல்வர் வண. அக்ஷராத்மாநந்த மகராஜ், யாழ். சின்மயா மிஷன் முதல்வர் வண. சிதாகாசானந்தா சுவாமிகள், கந்தர்மடம் வேதாந்த மடம் ஸ்ரீமத் வேதவித்தியாசாகர சுவாமிகள் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்வர்.
Powered by Blogger.