மன்னாரில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல்- சாள்ஸ் எம்.பி!!

தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ஒரு இனம் சார்ந்த, ஒரு மதம் சார்ந்த, ஒரு திணைக்களமாக மன்னாரில் இயங்கிக் கொண்டு இருப்பதால், இங்குள்ள மக்கள் வீடுகள் அமைக்க முடியாத நிலமைகள், விளையாட்டு மைதானங்கள் புனரமைக்க முடியாத நிலமைகள் காணப்படுகின்றன என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
யாவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழ் லூர்து நகர் என்ற பெயரில் 102 வது மாதிரிக்கிராமம் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அவர் தெரிவித்ததாவது,
மன்னார் மாவட்டத்திற்கான விளையாட்டு மைதானம் நறுவிலிக்குளத்தில் புனரமைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த வேலை இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. காரணம் கேட்டால் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் நிறுத்தி வைத்துள்ளது.
திருக்கேதீஸ்வரத்தில் மக்கள் குடியேற இயலாது. நானாட்டான் இராசமடுவில் விட்டுத்திட்டம் கட்ட முடியாது. இதனால் கிடைக்கப் பெறுகின்ற வீட்டுத்திட்டங்களைத் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் தடை செய்து வருகின்றது
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஒரு இனம் சார்ந்த ஒரு மதம் சார்ந்த ஒரு திணைக்களமாகத்தான் அது இங்கே செயற்படுகின்றது.
ஆகவே தொல்பொருள் திணைக்களத்தால் தடையாக உள்ள மக்களுக்கான அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்த ஆவண செய்ய வேண்டும்.என்றார்
Powered by Blogger.