முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதா நீதிமன்றம் அழைப்பாணை??

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தமை தொடர்பான வழக்கு தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்நிலையில் அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு நேற்று நிறைவடைகிற அதேநேரம், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றில் பதிவு செய்த மனு, செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#jaffna #deniswaran   

No comments

Powered by Blogger.