நாடு முழுவதும் பசுவதைத் தடைச் சட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பசு வதையைத் தடை செய்யும் விதமாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கார்ப்பரேட் சாமியாரான ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ப்பூரில் நேற்று (12.8.18) மோடியின் நெருங்கிய நண்பரும், பதஞ்சலி என்ற கார்ப்பரேட் கம்பெனியின் அதிபருமான ராம் தேவ் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

அரசு அதிகாரிகள் பசுவதையை தடுப்பதில் தங்களது கடமையிலிருந்து தவறிவிட்டதால் பசு காவலர்களே அந்த கடமையை எடுத்துக்கொண்டுள்ளனர். பசுக்கள் கடத்தப்படுவது குறித்து யாரும் பேசுவதில்லை. சில பசுக் காவலர்கள்தான் தவறு செய்கின்றனர். இதனால் மற்ற உண்மையான பசுக் காவலர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

பசு வதைக்கு ஏன் ஊக்கமளிக்கப்படுகிறது? பசு வதை நடக்கக் கூடாது. நாங்கள் பசு வதைக்கு லைசன்ஸ் அளிப்பதற்கும், பசுக்கள் கடத்தப்படுவதற்கும் எதிராக இருக்கிறோம். பசு வதை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடியைவிடப் பெரிய தேச பக்தர் மற்றும் பசுக் காவலர் யார் இருக்க முடியும்?

அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவு செய்வதைப் பொறுத்தவரை நமது நாட்டில் சட்ட விரோதமாக யாரும் இருக்க அனுமதிக்கக் கூடாது. இந்தியாவில் எறத்தாழ 4 கோடி மக்கள் சட்ட விரோதமாக வசிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.