திருமுருகன் காந்தி: நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு!

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குறித்தான ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஆகஸ்ட் 13) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாகக் கூறி, திருமுருகன் காந்தி காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருமுருகன் காந்தியின் தந்தை காந்தி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவரின் சார்பாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் அமர்வு முன்பாக ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

மனுவில் “திருமுருகன் காந்தியை கடந்த 9ஆம் தேதி பெங்களூருவில் கைது செய்ததற்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், காவல் துறைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், திருமுருகன் காந்திக்கு எதிராக தேசத் துரோக வழக்கை எதைக் கருத்தில் கொண்டு பதிவு செய்தீர்கள் எனத் தெரியவில்லை” என்று குறிப்பிட்ட நீதிபதி பிரகாஷ், திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க முடியாது எனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விடுதலையாகி வந்த திருமுருகன் காந்தி மீது ஏதாவது ஒரு வழக்குப் போடவேண்டும் என முடிவு செய்த காவல் துறையினர், 2017ஆம் ஆண்டு பெரியார் சிலைக்குப் பேரணியாகச் சென்று மாலை போட்டதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கில் மீண்டும் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்தி, பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். திருமுருகன் காந்தியின் இந்த கைதுதானது சட்டத்திற்கு விரோதமானது” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் பதிலை கேட்டனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , பதிலை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் கால அவகாசம் வழங்க முடியாது எனவும், நாளையே தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.