இலத்திரனியல் ஆவண சான்று உறுதிப்படுத்தல்!

இலத்திரனியல் ஆவண சான்று உறுதிப்படுத்தல் முறைமையை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கள் கைச்சாத்திட்டுள்ளன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இலத்திரனியல் ஆவண சான்று உறுதிப்படுத்தல் முறைமையினூடாக வழங்கப்படுகின்ற ஆவண சான்று உறுதிப்படுத்தல் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிக்கும் நோக்கில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலி மாவட்டத்திலுள்ள 19 பிரதேச செயலகங்களில் ஒரு ஆரம்ப திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வசதியை இலங்கையிலுள்ள 332 பிரதேச செயலகங்களுக்கும் விஸ்தரிப்பதிற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனூடாக பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆவணப்படுத்தல் கருமங்களை கொழும்பிலுள்ள சேவை பிரிவை நாடாமல், தமக்கு மிக நெருக்கமான பிரதேச செயலகங்களில் பூர்த்தி செய்து கொள்வதனை சாத்தியப்படுத்தும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.