“இடிபடும் கோட்டைகள்”- நாவல் வெளியீடு

மூத்த படைப்­பா­ளர் நா. யோகேந்­தி­ரன் எழு திய “இடி­ப­டும் கோட்­டை­கள்” நாவல் நேற்று சனிக்­கி­ழமை 11 ஆம் திகதி நல்­லூர் நாவ­லர் கலா­சார மண்­ட­பத்­தில் வெளி­யி­டப்­பட்­டது.

நூல் வெளி­யீட்­டுக்கு முதன்மை விருந்­தி­னர் க­ ளான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வ­னும், யாழ்ப்­பாண மாவட்ட செய­லர் நா.வேத­நா­ய­க­னும் கலந்து கொண்­ட­னர்.

இந்த நூல் வெளி­யீடு 1950- – 1960 வரை­யான காலப்­ப­கு­தி­யில் எமது மண்­ணில் நில­விய சமூகப் பண்­பாட்டு வாழ்­வி­யலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எழு­தப்­பட்ட இலக்­கி­யப் படைப்­பா­கும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் வாழ்த்­துரை நிகழ்த்­தி­னார்.

“அனை­வ­ரா­லும் எழுத முடி­யாது. எழு­து­ப­வர்­களை ஊக்­கு­விக்க வேண்­டும். பல எழுத்­தா­ளர்­கள் மற்­றும் கலை­ஞர்­கள், படைப்­பா­ளி­க­ளுக்கு என்­னால் முடிந்த உத­வி­க­ளைச் செய்­வேன். இளை­ய­வர்­கள் தற்­போது வாசிப்­பது குறைவு. இளை­ஞர்­க­ளின் மத்­தி­யில் வாசிப்­புப் பழக்­கத்­தைக் கொண்டு செல்ல வேண்­டும். அர­சி­ய­லோடு சேர்ந்து அனைத்­தை­யும் பெற்­றோர்­கள் தமது பிள்­ளை­க­ளுக்­குச் சொல்­லிக் கொடுக்க வேண்­டும் “ என்று அவர் தனது வாழ்த்­து­ரை­யில் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மாவட்ட செய­லர் வாழ்த்­துரை நிகழ்த்­தி­னார். எழுத்­தா­ள­ருக்­குத் தனது வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்த மாவட்­டச் செய­லர் அவ­ரு­டைய பணி மேலும் வளர்ச்­சி­ய­டைய வேண்­டும் என்­றும் வாழ்த்­தி­னார்.

நிகழ்­வில் வட­மா­காண கலை பண்­பாட்டுச் செய­லா­ளர் சத்­தி­ய சீ­லன், எழுத்­தா­ளர்­கள், ஆர்­வ­லர்­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.