நாவற்குழி விவகாரம்: சுமூகத் தீர்வை எட்டுவதற்காக வழக்கு ஒத்திவைப்பு!

தேசிய வீட­மைப்பு அதி­கார சபைக்­குச் சொந்­த­மான நாவற்­கு­ழிக் காணிக்­குள் அத்­து­மீறி குடி­யே­றி­னார்­கள் என்ற குற்­றச்­சாட்­டில் 35 குடும்­பங்­க­ளுக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்கு, நவம்­பர் மாதம் 9ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான அரச தலை­வர் சட்­டத்­த­ர­ணி­யும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ர­னின் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்டு நீதி­மன்­றம், நீண்­ட­கா­லம் வழங்கி வழக்­குத் திக­தி­யி­டப்­பட்­டது.

தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பைக்­குச் சொந்­த­மான நாவற்­கு­ழிக் காணி­யில் அத்­து­மீ­றிக் குடி­யே­றி­யுள்­ள­தா­ கத் தெரி­விக்­கப்­பட்டு 62 குடும்­பங்­களை அங்­கி­ருந்து வெளி­யேற்­று­மாறு சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. 35 வழக்­கு­கள் விசா­ர­ணைக்­காக நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ரன், மக்­களை காணி­க­ளி­லி­ருந்து வெளி­யேற்ற முற்­ப­டு­வது தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில், வீட­மைப்பு அதி­கார சபைக்­கு­ரிய அமைச்­சர் சஜித் பிரே­ம­தா­ச­வி ­டம் நான் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தேன்.

அரச காணி­க­ளி­லி­ருந்து மக்­களை வெளி­யேற்­று­வது அர­சின் கொள்­கை­யல்ல என்று பதில் கூறிய அவர், நாவற்­குழி விவ­கா­ரம் தொடர்­பில் எது­வும் தெரி­யாது என்­றார். வீட­மைப்பு அதி­கார சபை­யின் அதி­கா­ரி­க­ளு­டன் மாலை­யில் பேச்சு நடத்­தப்­பட்­டது. அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச யாழ்ப்­பா­ணம் வந்து இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது என்று மன்­றில் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் தனக்கு எது­வும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்று தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யின் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி குறிப்­பிட்­டுள்­ளார். அந்­தக் காணி­யி­லி­ருந்து ஏன் உங்­களை வெளி­யேற்­றக் கூடாது என்­ப­தற்குக் கார­ணம் காட்­டு­வ­தற்கு திக­தி­யி­டு­மாறு அவர் மன்­றில் கோரி­யுள்­ளார்.

கார­ணம் காட்ட முடி­யும் என்று கூறிய சட்­டத்­த­ரணி சுமந்­தி­ரன், வழக்கை நீண்ட நாள் திக­தி­யி­டு­மாறு மன்­றில் கோரி­னார். வீட­மைப்பு அதி­கார சபை­யின் சட்­டத்­த­ரணி நீண்ட நாள் திகதி வழங்­கக் கூடாது என்று கூறி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நடந்த விட­யங்­கள் இன்று (நேற்று) பத்­தி­ரி­கை­க­ளில் வந்­துள்­ள­மையை நீதி­மன்­றின் கவ­னத்­துக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொண்டு வந்­த­து­டன், அமைச்­சர் குறிப்­பிட்­டதை கவ­னத்­தில் எடுத்து வழக்கை நீண்ட நாள் திக­தி­யி­டு­மாறு கோரி­னார். கோரிக்­கையை ஏற்­றுக் கொண்ட பதில் நீதி­வான் செ.கண­ப­திப்­பிள்ளை நவம்­பர் 9ஆம் திக­திக்கு வழக்கை ஒத்­தி­வைத்­தார்.

வழக்­கு­கள் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­போது குடும்­பத் தலை­வ­ருக்­குப் பதி­லாக பெண்­கள் நீதி­மன்­றில் முற்­பட்­ட­னர். அடுத்த தவ­ணைக்கு வழக்­கில் பெயர் குறிப்­பிட்ட குடும்­பத் தலை­வர் சமூ­க­ம­ளிக்க வேண்­டு­மெ­ன­வும் பதில் நீதி­வான் உத்­த­ர­விட்டு சமூ­க­ம­ளித்­த­வர்­களை தலா 50 ஆயி­ரம் ரூபா ஆள் பிணை­யில் செல்­லு­மா­றும் உத்­த­ர­விட்­டார். எஞ்­சிய வழக்­கு­கள் எதிர்­வ­ரும் 24ஆம் திகதி அழைக்­கப்­ப­ட­வுள்­ளது.

No comments

Powered by Blogger.