யாழ்.மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத் தலைவர் கூட்டமைப்பை கடுமையாகச் சாடையடி!

வடமராட்சி கிழக்கில் சில மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களுக்கு காணி வழங்கிப் பணம் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராக எமது மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனும் தடையாகவிருக்கிறார்கள். நாங்கள் வழக்குப் போட்டிருக்கிறோம். நீங்கள் போராட்டம் நடாத்தினால் உங்களைப் பிடித்துச் சிறைக்குள் அடைப்பார்கள் என்று கூறி வடமராட்சிப் பகுதி மக்களைப் பயப்பீதியில் வைத்திருக்கிறார்கள். எனவே, மக்கள் போராட்டங்களை முடக்குவதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தானென்பதை நான் வெளிப்படையாகச் சொல்ல விரும்புகின்றேன் என மீனவர் யாழ்.மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை(17-08-2018) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

#jaffna #Fishermen #srilanka

No comments

Powered by Blogger.