இலங்கைக்கு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் வருகிறார்!

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெர எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவுடன் ஜப்பான் – இலங்கை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை நடத்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை அரசின் உயர் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளார்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரொருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.