அரசின் கண்காணிப்பில் ஜெட் ஏர்வேஸ்!

நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் சில பிரச்சினைகள் குறித்த தகவல்களை ஒன்றிய கார்பரேட் விவகார அமைச்சகம் கேட்டுள்ளது. மேலும், காலாண்டு விவரங்கள் வெளியிடப்படுவதைத் தாமதப்படுத்துவது குறித்தும் அந்நிறுவனத்தின் ஆடிட்டர்களிடம் கார்பரேட் விவகார அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது செலவுகளைக் குறைத்து நிதி நெருக்கடிகளிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது. கார்பரேட் விவகார அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடமிருந்து சில பிரச்சினைகள் குறித்த விவரங்களை நிறுவனங்கள் பதிவாளர் கேட்டுள்ளதாகவும், அதுசார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

என்னென்ன பிரச்சினைகள் சார்ந்த விவரங்களை அமைச்சகம் கேட்டுள்ளது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. ஜூன் காலாண்டுக்கான விவரங்களை வெளியிடுவது தாமதமாவது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஆடிட்டர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.