விஜயகலா தொடர்பில் சட்டமா அதிபர் அறிக்கை இன்னும் இல்லை!

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக சட்டமா அதிபர் அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் விஜயகலாவின் உரை தொடர்பாக சட்ட மா அதிபர் அறிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பினார்.

விஜயகலா குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை வளர்த்தெடுக்கும் நோக்கிலேயே புலிகளுக்கு ஆதரவான கருத்தை வௌியிட்டதாக தெரிவித்துள்ளதாகவும் அவ்வாறான நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை குறித்தும் விமல் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்ட மா அதிபரின் அறிக்கை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.