மன்­னார் அகழ்­வுப் பணி 20 வரை இடை நிறுத்­தம்

மன்­னார் சதொச வளா­கத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வந்த அகழ்­வுப் பணி­கள் எதிர்­வ­ரும் 20 ஆம் திக­தி­வரை இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த அகழ்­வுப் பணி­கள் இது­வரை சனி, ஞாயிற்­றுக் கிழ­மை­கள் தவிர்ந்த ஏனைய நாள்­க­ளில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. தற்­போது ஒரு வார­ம­ள­வில் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. அதற்­கான கார­ணம் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

மன்­னார் நகர நுழை­வா­யி­லில் அமைந்­தி­ருந்த லங்கா சதோச கட்­ட­டம் உடைக்­கப்­பட்டு புதிய கட்­ட­டம் அமைக்­கும் பணி­கள் நடை­பெற்­றன. அந்­தக் காணி­யில் அக­ழப்­ப­டும் மண் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது. அங்கு கொள்­வ­னவு செய்­யப்­பட்டு மன்­னார், எமில் நக­ரில் வீடொன்­றில் கொட்­டப்­பட்ட மண்­ணில் மனித எலும்பு எச்­சங்­கள் காணப்­ப­டு­கின்­றன என்று வீட்டு உரி­மை­யா­ள­ரால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

பொலி­ஸார் அங்கு சென்று மண்ணை ஆராய்ந்­த­து­டன், மன்­னார் நீதி­மன்­றின் கவ­னத்­துக்­கும் கொண்டு வந்­தி­ருந்­த­னர்.

மார்ச் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்­சி­யாக 3 நாள்­க­கள் மன்­னார் நீத­வான் ஏ.ஜீ.அலெக்ஸ்­ராஜா மற்­றும் சட்ட வைத்­திய அதி­காரி ஆகி­யோர் முன்­னி­லை­யில் மண் குவி­ய­லில் இருந்­தும், வீட்டு வளா­கத்­துக்­குள் பரப்­பப்­பட்ட மண்­ணி­லி­ருந்­தும் சந்­தே­கத்­துக்­கி­ட­மான எலும்­புத் துண்­டு­கள் மீட்­கப்­பட்­டன. அதை­ய­டுத்து லங்கா சதோச கட்­டட கட்­டு­மா­னம் இடை­நி­றுத்­தப்­பட்­டது. அதைத் தொடர்ந்த அகழ்­வுப் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.