இவ்வருடம்- 154 யானைகள் உயிரிழப்பு!

இந்த வருடத்தின் முதல் 7 மாதத்தில் மாத்திரம் 154 யானைகள் உயிரிழந்துள்ளது என்று வனவிலங்கு திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அதில் அதிகப்படியான யானை உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை , காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 50 முதல் 60 வயதுக்கிடைப்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர் என்று வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.