சம்பந்தனின் பதவி குறித்து 07ம் திகதி தீர்மானம்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து எதிர்வரும் 7ம் திகதி தீர்மானமொன்றை வௌியிடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமது தரப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எழுத்து மூல கோரிக்கை வைத்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 69 பேர் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெறும் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர்.

இதன் காரணமாகவே 70 பேரைக் கொண்டுள்ள தமது தரப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் இக் கோரிக்கை குறித்து எதிர்வரும் 7ம் திகதி தீர்மானமொன்றை அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
#Karu Jayasuriya #Rajavarothiam Sampanthan

No comments

Powered by Blogger.