சிம்புவுக்கு ஜோடி இவர்தான்!

செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடி யார் என்பது உறுதியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படம் சரியாக போகாத நிலையில் பல முன்னணி நடிகர்-நடிகைகளை இணைத்து செக்கச்சிவந்த வானம் எனும் படத்தை இயக்கிவருகிறார். அதன்படி, அருண் விஜய், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் என நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்து வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பும் மேற்கொள்கின்றனர். செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரதனாக அரவிந்த்சாமியும், ரசூலாக விஜய்சேதுபதியும், தியாகுவாக அருண் விஜய்யும், எத்தியாக சிம்புவும் நடிப்பதாக போஸ்டர்கள் மூலம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கதாநாயகிகளின் கதாபாத்திர போஸ்டர்களும் தற்போது வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அதன்படி படத்தின் ஹீரோக்களில் ஒருவரான சிம்புவுடன் இணைந்து பிரபல மாடல் அழகி டயானா எரப்பா புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அவர் சாயா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. இதனால் சிம்புவின் ஜோடியாக அவர் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது.

செக்கச் சிவந்த வானம் போலவே வடசென்னை படத்தின் போஸ்டர்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகின்றன. அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் குறித்த தகவல் அடங்கிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அவர் அதில் பத்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

No comments

Powered by Blogger.