ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் நீண்டகாலமாக கூரிக்கொண்டிருந்த நிலையில் இன்று வெடித்துள்ளது!

நாங்கள் இந்த மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெறுமனே நாடாளுமன்றில் இருக்கவில்லை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இங்கு மேற்கொள்ளப்படும்  ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் நீண்டகாலமாக கூரிக்கொண்டிருந்த நிலையில் இன்று வெடித்துள்ளது.

மகாவலி அபிவிருத்தி சபையின் ஊடாக தமிழ்மக்களின் காணிகள் அபகரித்துக்கொண்டிருந்தமை அனைவருக்கும் தெரிந்த ஒன்று நாங்கள் இந்த மண்ணின் நாடாளுமன்ற உறுபினர்களாக வெறுமனே நாடாளுமன்றில் இருக்கவில்லை அண்மையில் கடற்தொழில் பிரச்சனை வந்தபோது விமல் வீரவன்சவுடன் வாக்குவாதாத்தில் ஈடுபட்டு எமது உரிமையினை நிலைநாட்டியுள்ளோம்.

நேற்றையதினம் ஜனாதிபதியிடம் இந்த கருத்தினை தெரிவித்த போது அதாவது எட்டுபேருக்கு அண்மையில் மகாவலி அதிகாரசபை ஊடாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கபட்டு  கொடுக்ப்பட்டுள்ளது என்று சொன்னோம்.

அவர் நேரடியாக தொலைபேசியில் மகாவலி சபையிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சொல்கின்றார்கள் இல்லை என்று அப்போது நாங்கள் சொன்னோம் இல்லை காணிகள் கொடுக்ப்பட்டது உண்மை என்றுசொன்னோம் எங்களுக்கு முன்னாலே அறிவித்தல் கொடுத்திருந்தார்.

அதுகொடுத்திருந்தாலோ கொடுக்காமல் விட்டிருந்தாலோ இத்துடன் நிறுத்திவிட்டு என்னை சந்தியுங்கள் என்று சொல்லியிருந்தார் சந்தித்து கதைத்த பின்னர்தான் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் சந்தர்ப்பங்களை பாவிக்காமல் இல்லை அடுத்த சந்திப்பு ஒக்டோபர் 3 ஆம் திகதி கிடைக்க இருக்கின்றது புதுக்குடியிருப்பு படையினரின் ஆக்கிரமிப்பு, வட்டுவாகல் காணிப்பிரச்சனை சொல்லி இருக்கின்றோம் எனவே ஒன்டோபர் மாதம் ஜனாதிபதியுடன் கிடைத்த சந்தர்பத்தை சரிவர பயன்டுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.