தேர்தலை பிற்போட எவருக்கும் அதிகாரமில்லை – மஹிந்த!

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின்  அறிக்கையினை பிரதமர் தோல்வியடைய செய்து, ஜனாதிபதியை வீழ்த்தியுள்ளார் என குறிப்பிடுவது வேடிக்கையாகவே காணப்படுகிறது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

பழயை முறைமையில் தேர்தலை நடத்த நாம் ஆதரவு வழங்கவில்லை. புதிய தேர்தல் முறைமையிலும் சில குறைப்பாடுகள் உள்ளது. இவ்வாறான குறைப்பாடுகளை வைத்துக் கொண்டு தேர்தலை நடத்தினால் அது ஜனநாயகத்துக்கு எரான செயற்பாடாகும்.

மேலும் பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் தல‍ைமையிலான ஐவர் அடங்கிய குழுவினரிடம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இரண்டு மாத காலத்திற்குள் எல்லை நிர்ணய அறிக்கையில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை திருத்தி ஜனாதிபதிக்கு மீளாய்வு அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்னர், விரைவில் மாகாண சபை தேர்தல்களை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆகவே எவருக்கும் அரசியல் காரணிகளை காரணம் காட்டி தேர்தலை பிற்போடுவதற்கு அதிகாரம் கிடையாது என்றார். 

No comments

Powered by Blogger.