சட்டவிரோத தொழிலுக்காக கடலுக்குள் சென்ற தென்னிலங்கை மீனவர்கள்

சட்டவிரோத தொழில்கள் நிறுத்தப்படும் என மத்திய கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்திருந்த நிலை யில் இன்று நாயாறு பகுதியில் தங்கியிருந்து மீன்பி டிக்கும் தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் வெளிச் சம் பாச்சி மீன்பிடிக்க தயாரான நிலையில் மக்களு டைய எதிர்ப்பினால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது.

இன்று மாலை 6 மணியளவில் சுமித் நிஷாந்த என் பவருக்கு சொந்தமான 7 படகுகள் வெளிச்சம் பாச்சி மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றிருந்து. இத னை அவதானித்த நாயாறு மக்கள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாகா ணசபை உறுப்பினரும் மக்களும் இணைந்து கடலு க்குள் சென்ற மீனவர்களை திருப்பி அழைத்துள்ள னர். இந்நிலையில் மக்கள் மத்தியில் உள்ள விழிப் புணர்வை ரவிகரன் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.