பொலன்னறுவை வனஜீவராசிகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

பொலன்னறுவை வலய வனஜீவராசிகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முந்தினம் மின்னேரிய வனப்பகுதியில் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு கோரி இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

மின்னேரிய ஆற்றில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை கைதுசெய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கைதானவர்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#Polonnaruwa  #srilanka #tamilnews #strike

No comments

Powered by Blogger.