மகிந்தவின் சகோதரர் உடலுக்கு- சுப்பரமணியன் சுவாமி அஞ்சலி!

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்திரா உடலுக்கு இந்தியா பாஜக மூத்த அரசியல்வாதி சுப்பரமணியன் சுவாமி அஞ்சலி செலுத்தினார்.

கொழும்பு மெதமுலனவிலுள்ள மகிந்தவின் வீட்டில், காலமான சகோதரரான சந்திரா ராஜபக்சவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது பூதவுடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி செலுத்திவரும் நிலையில், சுப்பரமணியன் சுவாமியும் தனது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

சந்திரா டியூடர் ராஜபக்ச தங்காலையிலுள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுக் காலமானார்.

அவரது இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை (25-08-2018) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.