சுயமாக துன்புறுத்திக்கொள்ளும் பிரித்தானிய சிறுவர்கள்!

பிரித்தானியாவில் உள்ள 14 வயதுக்குட்பட்ட சிறார்களில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதியினர் தம்மை தாமே சுயமாக  துன்புறுத்திக்கொள்வதாக புதிய ஆய்வொன்று வௌியாகியுள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 11 ஆயிரம் சிறார்களுள் 22 வீதம் சிறுமிகளும், 9 வீதம் சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இதுபற்றி வினவிய போது, தாம் இந்த ஆய்வு நடத்தப்படுவதற்கு முன்னரான வருடம் வரை தமது தேவைக்கு ஏற்ற வகையில் சுயமாக தம்மை துன்புறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
தமது எதிர்பாலினத்தையோ, ஒத்த பாலினத்தையோ கவரும் முகமாக அவர்கள் மேற்கொள்ளும் சுய துன்புறுத்தல்கள் மிகவும் மோசமானவையாக இருப்பதுடன், சராசரியாக 46 சதவீதம் கடுமையானதாக உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலின ஒருமைப்பாடுகள், தோற்றம் பற்றி கவலைகள் போன்றவை சிறார்களின் மகிழ்ச்சியற்ற தன்மைக்கு பங்களிப்பு செலுத்துவதாக சிறுவர் சமூக அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
அந்த அமைப்பின் வருடாந்த சிறுவர் நல அறிக்கையில், பிரித்தானியாவில் உள்ள குழந்தைகளின் நல்வாழ்வின் நிலையை முக்கியமாக ஆராய்கிறது. அத்துடன் சுய துன்புறுத்தல் புள்ளிவிபரங்களும் உள்ளடங்குகின்றன.
இதன்படி, 14 வயது மதிக்கத்தக்க சிறார்கள் சுமார் 109,000 பேர் பிரித்தானியா முழுவதும் சுய துன்புறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளதாக சிறுவர் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 76,000 சிறுமிகளும், 33,000 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

No comments

Powered by Blogger.