UAE இன் 100 மில்லியன் டொலர் உதவியை ஏற்க இந்தியா மறுப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தினால் இந்தியாவின் கேரலா பிராந்தியத்துக்கு வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபா உதவித் தொகையை இந்தியா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கேரலா பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு அனர்த்தம் என்பவற்றினால் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர். பிராந்தியத்தில் நிலவும் மோசமான நிலைமையை சீர் செய்ய உதவி வழங்குமாறு அப்பிராந்திய முதலமைச்சரின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பிராந்தியங்களுக்குத் தேவையான அளவு நிதியை மத்திய அரசாங்கம் வழங்க முடியாமல் போனமையே இவ்வாறு உதவி கோருவதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில்  இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தற்பொழுது நாட்டில் காணப்படும் கொள்கைக்கு அமைவாக புனரமைப்பு மற்றும் சகல தேவைகளையும் சுயமாக நிறைவு செய்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தியாவுக்கு வெளிநாட்டு நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால், அது இந்திய வம்சாவளியினரிடமிருந்தே முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.