வவுனியா கூட்டுப்படை​த் தலைமையகத் தாக்குதலில் காவியமான கரும்புலிக​ளின்10ம் ஆண்டு நினைவு!

சிறிலங்கா படைகளின் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்தின் மீதான அதிரடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் விநோதன், லெப்.கேணல் மதியழகி உட்பட்ட 10 கரும்புலிகளின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


09.09.2008 அன்று சிறிலங்கா வவுனியாவில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி கரும்புலிகளால் அதிரடித் தாக்குதல் நடாத்தப்பட்டது.

கேணல் கிட்டு பீரங்கிப் படையணி மற்றும் வான்புலிகளின் துணையுடன் நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தத் தாக்குதலின்போது

கரும்புலி லெப்.கேணல் விநோதன் (இராசரத்தினம் பிரதாப் - வேலனை, யாழ்ப்பாணம்)

கரும்புலி லெப்.கேணல் மதியழகி (இரத்தினசாமி லோகேஸ்வரி - பாண்டியன்குளம், மல்லாவி, முல்லைத்தீவு)

கரும்புலி மேஜர் ஆனந்தி (சாத்தகுமார் விஜயலட்சுமி - மன்னம்பிட்டி, மட்டக்களப்பு)

கரும்புலி மேஜர் நிலாகரன் (முனியாண்டி ஜீவராசா - கிளிநொச்சி)

கரும்புலி கப்டன் நிமலன் (தவராசா தவக்குமார் - அக்கரைப்பற்று, அம்பாறை)

கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ் (வையாபுரி சசிகலா - வவுனியா)

கரும்புலி கப்டன் கனிமதி (திருநாவுக்கரசு தட்சாயினி - பேரடம்பன், பூநகரி, கிளிநொச்சி)

கரும்புலி கப்டன் எழிலகன் (கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் - பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

கரும்புலி கப்டன் அகிலன் (இராசகுலேந்திரன் கேதாரன் - யாழ்ப்பாணம்)

கரும்புலி கப்டன் முத்துநகை (சிவகுருநாதன் சிவரோகினி - முகாவில், இயக்கச்சி, கிளிநொச்சி)

ஆகிய கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.