முப்பத்தொரு ஆண்டுகள் ஆனதின்று.10ம் நாள்!



தன் வயிற்றில் போர் 
தொடுத்த தனையன் 
நினைவிழந்து
நீள் துயில் கொள்ள
நீட்டிக் கிடக்கிறான்
நீறுபூத்த நெருப்பான
நெஞ்சோடு மக்கள்
வழியேதும் தெரியாமல்
வாசல் பார்த்துக் 
காத்துக்கிடக்கிறார்கள்
நல்லையின் பெருமணி
நாதமின்றி ஒலித்துக் கிடக்குது
வீரப் பிள்ளையின்
முடிவு இனி எது என்று
அறுதியிட்டாறிற்று
ஈழதேசம் எங்கும்
வீதிவழி மக்கள் குவிந்து
தம் இயலாமையின் வெளிப்பாட்டை 
வெளிப்படுத்த 
யாழ் நகரும் 
முல்லை மண்ணும்
முற்றாக முடங்கிப்போக
கொந்தளித்த மக்கள் மீதினில்
கோர முகம் காட்ட எத்தணித்து
தோற்றுப் போயினர் 
அமைதி காக்க வந்த 
கொடும் படையினர்
எந்த நேரமும் 
எதுவும் நடக்கலாம்
எம் பிள்ளை திலீபன்
எமை விட்டு பிரியலாம்
தியாகப் பயணத்தின்
பத்தாம் நாள் 
அமைதியின்றி கழிந்து
முப்பத்தொரு ஆண்டுகள் 
ஆனதின்று
#திலீபம்
#ஈழத்துப்பித்தன்
24.09.2016/17

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.