யாழ்ப்பாணம் இரத்த தான முகாம் இந்துக் கல்லூரியில் பதற்றம்!!

யாழ். இந்துக் கல்லூரியில் இரத்த தான முகாம் மேற்கொள்ளப்பட்ட போது ஆயுதத்துடன் புகுந்த நபரால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளையொட்டி யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களால் இன்று இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது இரத்ததான முகாம் நடத்தப்பட்ட இடத்திற்கு வந்த நபரொருவர் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியினை எடுத்து தன்னுடன் வந்த மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தால் இரத்ததானம் வழங்கும் இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.எனினும் ஆயுதத்துடன் வந்த நபர் இரத்ததானம் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

#jaffna  '#SRILANKA '#TAMILNEWS

Powered by Blogger.