: இந்திய அணிக்கு 223 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 223 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என பங்களாதேஷ் அணி நிர்ணயித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்றுவரும், ஆசியக் கிண்ண தொடரின் இறுதி போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது.

டுபாயில் நடைபெறும் இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா அணியும் முஷரஃபி மோர்டாசா தலைமையில் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்பிரகாரம் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் லிட்டான் தாஸ் 121 ஓட்டங்களையும் சவுமிய சர்க்கார் 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3, கேதார் ஜாதவ் 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணி 223 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகின்றது. 

No comments

Powered by Blogger.