தியாகி திலீபனின் 31 ஆவது நினைவுதினம் புதுக்குடியிருப்பில் அனுஸ்டிப்பு!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவு பந்தலில் திலீபனின் திருவுருவப்படம் வைத்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வணிகர்கள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சந்தை பகுதி வணிகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு திலீபனுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்கள் 

Powered by Blogger.