வவுனியாவில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல்!

வவுனியாவில் கடந்த 581வது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட சங்கத்தின் உறவுகளின் குடும்ப உறுப்பினர்களால் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, இன்று பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

'நீங்கள் மடியவில்லை ஜயா' என எழுதப்பட்ட வாசகத்துடன் காணப்பட்ட தீயாக தீபம் திலீபனின் படத்திற்கு காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் குடும்ப உறுப்பினர்களினால் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தியாக தீபம் திலீபனின் 31வது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Powered by Blogger.