காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நடந்­த­தைக் கூறு­வது அவ­சி­யம் – ஐ.நா. குழு அறிக்கை!

இலங்­கை­யில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது? அவர்­கள் எங்­கி­ருக்­கின்­றார்­கள்? என்ற உண்­மையை அறி­வ­தற்­காக அவர்­க­ளின் குடும்­பத்­த­வர்­கள் நீண்ட கால­மா­கக் காத்­தி­ருக்­கின்­ற­னர் என்று ஐக்­கிய நாடு­கள் சபை­யின் பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான குழு தெரி­வித்­துள்­ளது.

அடுத்த வாரம் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் 39ஆவது அமர்­வுக்­குச் சமர்ப்­பிக்­க­வுள்ள தனது வரு­டாந்த அறிக்­கை­யிலே அந்­தக் குழு இவ்­வாறு தெரி­வித்­துள்­ளது. அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அலு­வ­ல­கம் செயற்­பா­டு­வதை அரசு உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

நவம்­பர் மாதம் ஐக்­கிய நாடு­க­ளின் பல­வந்­த­மாக காணா­மல்­போ­னோர் குறித்த குழு தனது இலங்­கைப் பய­ணத்­தின் பின்­னர் முன்­வைத்த பரிந்­து­ரை­களை இலங்கை அரசு கருத்­தில்­கொள்ள வேண்­டும்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது அவர்­கள் எங்­கி­ருக்­கின்­றார்­கள் என்ற உண்­மையை அறி­வ­தற்­காக அவர்­க­ளது உற­வி­னர்­கள் மிக நீண்ட கால­மாக காத்­தி­ருக்­கின்­ற­னர்.

இந்த விட­யம் ஐக்­கிய நாடு­கள் பிர­க­ட­னத்­தின் கீழ் முக்­கி­ய­மாக நிறை­வேற்­றப்­பட வேண்­டிய விட­யம். பன்­னாட்­டுச் சட்­டங்­க­ளின் கீழ் இவற்றை நிறை­வேற்ற வேண்­டிய கடப்­பாடு அர­சுக்கு உண்டு.- என்­றுள்­ளது. 
Powered by Blogger.