இலங்­கைக்கு கனடா போன்ற அர­ச­மைப்பே அவ­சி­ய­மா­னது!

இலங்­கை­யின் புதிய அர­ச­மைப்பு கனடா போன்ற நாடு ­க­ளில் காணப்­ப­டும் அதி­கா­ரப் பகிர்வு முறை­க­ளின் அடிப்­ப­டை­யில் அமைய வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை ­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

இலங்­கைக்­காக கனே­டி­யத் தூது­வர் நேற்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். இந்­தச் சந்­திப்­புக் கொழும்­பில் உள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றுள்­ளது. அந்­தச் சந்­திப்­பி­லேயே எதிர்க்­கட்­சித் தலை­வர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது-,

பல்­வேறு நாடு­க­ளில் காணப்­ப­டும் அதி­கா­ரப் பகிர்வு முறை­மை­க­ளின் அடைப்­ப­டை­யில் இலங்­கை­யின் புதிய அர­ச­மைப்பு அமைய வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யுப் கனடா உன­ரும் என நப்­பு­கின்­றோம்.

இலங்­கை­யில் பாதிக்­கப்­பட்ட மக்­கள் மத்­தி­யில் கனே­டிய அரசு ஐ.நாவில் எமது மக்­க­ளுக்கு வழங்­கும் ஒத்­து­ழைப்பு உட்­பட இங்கே மேற்­கொள்­ளும் பணி­க­ளுக்­கும் நன்­றி­யைத் தெரி­விக்­கின்­றோம்.

இங்கே கருத்­து­ரைத்த கனே­டி­யத் தூது­வர் ஐ.நா. தொடர்­பில் கனடா எடுக்­கும் நிலைப்­பாட்­டில் எந்த மாற்­ற­மும் இருக்­காது. அதே நேரம் ஐ.நாவில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தையே எதிர்­பார்க்­கின்­றோம்.- என்­றார்.

இவற்­றைச் செவி­ம­டுத்த கனே­டி­யத் தூது­வர், அர­ச­மைப்­புத் தொடர்­பான நகர்­வு­களை அவ­தா­னித்து வரு­கின்­றோம் என்று தெரி­வித்­தார்.

இந்­தச் சந்­திப்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ர­னும் கலந்து கொண்­டார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.