அம்பேபுஸ்ஸ முகாம் கொலை சம்பவம்: இரு இராணுவ வீரர்கள் பணி இடைநீக்கம்!

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


இராணுவ சிங்க ரெஜிமேண்டின் ஆரம்ப விசாரணை நீதிமன்றம் மற்றும் இராணுவ பொலிஸாரால் இருவர் தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். 


விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை பொலிஸாரிடம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன் குறித்த இருவரினதும் சம்பளமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 


கடந்த 21 ஆம் திகதி அதிகாலையில் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  

No comments

Powered by Blogger.