தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு யேர்மனி - ஸ்ருட்காட்!

தண்ணீர் கூட அருந்தாது இந்திய வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராக பசிப் போர் புரிந்து வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 31 ஆவது நினைவு வணக்க நிகழ்வு தற்பொழுது ஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான கேணல் சங்கர் / முகிலன் மற்றும் கேணல் ராயூ/ குயிலன் ஆகியோரின் திருவுருவப்படங்களும் வணக்கத்துக்காக வைக்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டு .இருக்கின்றது.தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் அப்பகுதிமக்கள் கலந்துகொண்டு தங்கள் வீர வணக்கத்தைச் செலுத்தினார்கள். அத்தோடு பல கலைநிகழ்வுகளும்  இடம்பெற இருப்பதாக அறியப்படுகின்றது.

No comments

Powered by Blogger.