தியாக தீபம் திலீபனின்8ம் நாள்!

கண்கள்  குழிவிழுந்து
உடல் சருகாகி
துவண்டுபோன திலீபன்
உள்ளம் மட்டும்
சோர்வின்றி திடமான முடிவோடு தூங்கிக்கொண்டிருந்தன

வாடி வந்தங்கிய கொடியென
விழிகள் இமைக் மறந்து
முடிகள் கலைந்து
வயிறு ஒட்டியபடி....

சரித்தரம் கண்ட
சாதனை வீரனாய்
தமிழ்  மண்ணின் விடிவுக்காய்..

சிறுநரிக் கூட்டமாய்
இந்தியப் படை
வந்தெங்கள் தேசமதில்
வதைகள் செய்தனவோ

வாடிய வதனம் கண்டு
தமிழ்  இனம்
வாய்விட்டு கதறியபடி
இரக்கமில்லா இந்திய தேசம்
வாய்மூடி நின்ற காந்தியவாதிகள்
வாதாடி நின்றனரே
அண்ணன் உயிர்  காத்திட...

முழுமதி இவன் முகம்
சோர்ந்து போனதே
தேகம் அசைவின்றி
உதடுகள் உலர்ந்து ஒட்டி
வார்த்தைகள்  வரமறுத்ததே...
ஐயோ.,,என்று உலகமே கண்ணீரில் மிதக்க...நாள் கடந்ததே...

ஜெசுதா யோ

No comments

Powered by Blogger.