முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் 8ம் நாள்!

விழி திறக்க முடியாது
வெதும்பிக் கிடக்கிறான் திலீபன்
படை நடத்தும் போர்வீரன்
பசி கிடந்து  மூட்டிய சிறுபொறி
சிதறிப் பரந்து பற்றியது
தமிழர் தேசம் எங்கும்
உருகிக் கிடக்கும் திலீபனின்
உணர்வால் உலகமெங்கும்
தமிழர் ஒன்றிக் கிடக்கின்றனர்
திலீபனின் வழியிலே
தமிழர் தேசமெங்கும்
அடையாள உண்ணா விரதம்
அலையலையாய்
அணிதிரண்டனர் மக்கள்
பத்திரிகைகளில் எல்லாம்
பார்த்தீபனே தலைப்புச் செய்தியானான்
பாரதத்தின் பாராமுகம் கண்டு
பரிதவித்து குமுறினர் மக்கள்

பார்த்தீபா!
கந்தனின் தேருக்கு பின்
உந்தனுக்காய்
உந்தன் உணர்வினுக்காய்தான்
பேர் எழுச்சிகொண்டு
பெருநகர் நல்லையின் வீதி
பிதுங்கிக் கிடந்தது

ஆற்ற முடியா பெருவலியோடு
அழகனின் வீதி இருள் கவ்வ
திலீபனின் தியாகப்பயணத்தின்
எட்டாம் நாள் நகர்ந்து
முப்பத்தொரு ஆண்டுகள் ஆனதின்று...

#திலீபம்

#ஈழத்துப்பித்தன்

22.09.2016/17

No comments

Powered by Blogger.